அமெரிக்காவில் உயர் கல்வி கற்பதற்கான வழிமுறை என்ன, அதற்கு என்ன தேவை, எப்படி apply பண்ணுவது, எப்படி Scholarship பெறுவது, எப்படி ஒரு university தெரிவு செய்வது, ஆகிய விடயம்களை இந்த கட்டுரை விபரிக்கிறது.
அமெரிக்காவில் உயர்கல்வி கற்பது தொடர்பில் போதிய தகவல்கள், வழி காட்டல்கள் இலங்கை மாணவர்களுக்கு கிடைப்பதில்லை அதற்கான படிமுறை தெளிவாகத் தெரிந்தால் பலரும் பயன் பெறலாம். அமெரிக்க கல்வி நுழைவு ஒப்பீடளவில் சிறிது கடினம் என்றாலும் அவ்வளவு கடினம் அல்ல. இந்ததக் கட்டுரையின் ஒரேஒரு நோக்கம் அமெரிக்க உயர் கல்வி வழிமுறைகள் மற்றும் அனுகூலங்கள் தொடர்பான ஒரு நேர்த்தியான தகவலை வழங்குவது.
அமெரிக்க Degree க்கு உலகம் முழுவதும் உள்ள மதிப்பு உங்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும், அமெரிக்க Degree இருந்தால் நீங்கள் உலகின் எந்த ஒரு நாட்டிலும் வேலை செய்ய முடியும். உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் அரைவாசிக்கும் அதிகமானவை அமெரிக்காவிலே உள்ளன. அமெரிக்காவில் உள்ள தொழில் நுட்பம் உலகத்தின் முதன்மையான தொழில் நுட்பம் அதோடு நீங்கள் அங்கே கற்கும் கல்வி அங்குள்ள அதீத தொழில் நுட்பம் ,பிரமிக்கத்தக்க கட்டமைப்பு எல்லாவற்றுடனும் ஒன்றியதாகவே இருக்கும். அமெரிக்கத் தொழில் நுட்பத்திற்கு உதராணமாக, இந்த INTERNET ஐ ஆளும் Google, Facebook, Youtube, Wikipedia, Yahoo, Microsoft, Twitter, Apple, etc, உம் அவற்ரைஎல்லாம் தாங்கும் தாங்கும் INFRASTRUCTURE உம் அமெரிக்காவிலேயே உள்ளது.
அமெரிக்காவில் கல்வி வியாபாரம் அல்ல, கல்விப் பெறுபேறு அல்லது ஆங்கில அறிவு மிகவும் குறைவு என்றால் (Bellow the reasonable average) Admission or வீசா கிடைக்காது. அத்தோடு அமெரிக்காவில் படிக்கும்போது நீங்கள் படிக்கும் பல்கலைக்கழகத்துக்கும் வெளியில் வேலை செய்ய முடியாது, செய்வது சட்டப் படி குற்றம். மொத்தத்தில் நான் கூற வரும் விடையம் உங்களிடம் திறமையும் முயர்ச்சியும் இருந்தால் அமெரிக்காவிற்கு கல்வி கற்க செல்வது மிகச் சிறந்த தெரிவு. திறமையான மாணவர்களை மட்டுமே அமெரிக்க பல்கலைக் கழகம்கள் விரும்புகின்றன. உங்களிடம் முயற்சி இருப்பின் நீங்கள் திறமையானவரே! அத்தோடு உங்களுக்கு நல்ல கல்வி கற்று Professional ஆக வேலை செய்ய விரும்பின் மட்டுமே அமெரிக்கா செல்ல சிந்திக்க வேண்டும். நல்ல வேலை எடுப்பது சுலபம். கணனித் துறைக்கு மிகச் சுலபம் அதோடு சம்பளமும் சற்று அதிகம். படித்து முடிந்ததும் உங்களுக்கு வேலை செய்ய அனுமதி கிடைக்கும் அப்படியே நீங்கள் வேலை செய்யத் தொடக்கி 4-5 வருடங்களில் கிரீன் கார்டு பெறலாம்.
அமெரிக்காவில் ஒரு பொறியலாளரினது மாத சம்பளம் பொதுவாக $5000-$7000 USD. படித்தவுடன் வேலை எடுப்பது சுலபம். ஒரு நாளைக்கு 8 மணித்தியாலம் மட்டுமே வேலை(9-5 or 8-4), சனி, ஞாயிறு விடுமுறை.
அமெரிக்காவில் ஒரு பொறியலாளரினது மாத சம்பளம் பொதுவாக $5000-$7000 USD. படித்தவுடன் வேலை எடுப்பது சுலபம். ஒரு நாளைக்கு 8 மணித்தியாலம் மட்டுமே வேலை(9-5 or 8-4), சனி, ஞாயிறு விடுமுறை.
வெளிநாடு செல்லும் இந்தியா , சீனா நாடுகளின் முன்னணி மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவிற்கு செல்கின்றனர். வேலை தான் வேண்டும் மேற்ப்படிப்பு வேண்டாம் என்று இருபவர்கள் அமெரிக்காவில் MS முடித்து விட்டு Silicon Valley போன்ற இடம்களில் நல்ல ஒரு வேலையில் அமர்ந்து விடுகின்றனர். ஆனால் எமக்கு இவ்வளவு காலம் படித்து விட்டு இன்னும் ஓரிரு வருடங்கள் படிப்பதற்கு பஞ்சி என்றால் என்ன செய்வது?
டிகிரி முடித்து விட்டு அநேகமான உங்கள் சக நண்பர்கள் என்ன செய்கிறார்கள், அதிகமான சீனியர்கள் என்ன செய்தார்கள் என்று பார்த்து அதை அப்படியே தொடர்வதற்குப் பதிலாக , எது மிகச் சிறந்த தெரிவு என்பத்தை நன்கு ஆராய்ந்து பார்த்து உணர்ந்து அதை தொடருங்கள். இது உங்களினது எதிர்காலம் எப்போதும் தூர நோக்கில் சிந்தியுங்கள் . எப்போதும் சரியான planing மிக முக்கியம், உங்களிடம் எவ்வளவு திறமை, ஆற்றல் இருந்தாலும் நீங்கள் மிகச் சிறந்த திசையில் பயணிக்காவிடால் அவற்றால் உரிய பயனை அடைய முடியாது. சரியான life planing/career planing இருந்தால் அதிகம் கஷ்டப் படாமலே வாழ்கையில் வெற்றி பெறலாம். மிக முன்னுக்கு வரலாம்.
USA இல் Assistantship (Scholarship) உடன் MS/PhD படிக்கும் போது உங்களுக்கு மாதாந்தம் சேமிக்கக் கூடிய பணம் உங்களுக்கு ஒரு வளர்ச்சி அடைந்த ஆசிய நாட்டில் வேலை செய்து மிஞ்சும் பணத்திற்கு கிட்டத்தட்ட சமம். பின்னர் வேலைபார்க்கும்போது கிடைக்கும் சம்பளம் அதன் இரண்டு மடங்கை விட அதிகம். அத்தோடு அமெரிக்காவிலேயே அப்படியே செட்டில் ஆகி விடலாம். (இலங்கைக்கு திரும்பி வரவிரும்பினால் திரும்பியும் வரலாம்)
அமெரிக்காவில் படிக்க எவ்வளவு காலம் எடுக்கும்?

அமெரிக்காவில் உயர்கல்வி கற்க உங்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படைக் கல்வித் தகமைகள்
- பொதுவாக 4 வருட Degree (3 வருட Sri Lankan Degree உடன் கற்பதற்கு உள்ள முறைக்கு கீழே உள்ள இரெண்டாவது comment ஐப் பார்க்கவும். )
- GRE - இது கணிதம், ஆங்கிலம் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு பரீட்சை, இதன் ஆங்கில பகுதி கடினமானது.
- TOEFL/IELTS - TOEFL அல்லது IELTS. இரண்டில் ஏதாவது ஒண்டு. TOEFL தான் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை பொதுவாக 99% அமெரிக்க universities IELTS ஐயும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனாலும் உங்களுக்கு அமெரிக்கா தான் இலக்கு என்றால் TOEFL எடுப்பது நல்லது.
- OPTIONAL : Research Publications (IEEE, ACM), ஒரு additional advantage ஆனால் இல்லாவிடாலும் பரவில்லை, but பொதுவாக top universities PhD admission இக்கு இவற்றை எதிர்பார்க்கும்
USA இல் Assistantship (Scholarship) உடன் MS/PhD படிக்கும் போது உங்களுக்கு மாதாந்தம் சேமிக்கக் கூடிய பணம் உங்களுக்கு ஒரு வளர்ச்சி அடைந்த ஆசிய நாட்டில் வேலை செய்து மிஞ்சும் பணத்திற்கு கிட்டத்தட்ட சமம். பின்னர் வேலைபார்க்கும்போது கிடைக்கும் சம்பளம் அதன் இரண்டு மடங்கை விட அதிகம். அத்தோடு அமெரிக்காவிலேயே அப்படியே செட்டில் ஆகி விடலாம். (இலங்கைக்கு திரும்பி வரவிரும்பினால் திரும்பியும் வரலாம்)
அமெரிக்காவில் படிக்க எவ்வளவு காலம் எடுக்கும்?
அமெரிக்காவில் MS படிக்க இரண்டு வருடம்கள் எடுக்கும், MS + PhD இரண்டிற்குமாக - குறைந்தபட்சம் 5 வருடம்கள் எடுக்கும். அமெரிக்காவில் direct PHD என்பது இல்லை, உங்களுக்கு PhD admission கிடைத்து செல்லும்போது அங்கே முதல் 1.5 - 2 வருடம்கள் நீங்கள் MS Course work ஐத் தொடரவேண்டி இருக்கும் அதன்பிறகே உங்கள் PhD research தொடங்கும். (3-3.5 வருட research only PhD என்பது அமெரிக்காவில இல்லை ஆனால் ஒரு சில விதிவிலக்குகள் அவ்வபோது உண்டு) சிறந்த்த typical அமெரிக்க PhD எப்போதும் குறைந்தபட்சம் 5 வருடம்களாவது எடுக்கும். நீங்கள் முதலில் MS admission எடுத்து அதைப் படித்து விட்டு பினர் அதே அல்லது வேறு ஒரு university இல் PhD research ஐத் தொடர முடியும் இது (MS forst 1.5-2 years and then PhD next 3-3.5 years) மொத்தத்தில் குறைந்தபட்சம் 5 வருடம். இதனால் நீங்கள் முதலில் MS ஐ ஒரு university இல் முடித்துவிட்டு சிறப்பான பெறுபேறுகளுடன் PhD ஐ ஒரு மிகச்சிறந்த university இல் தொடரவும் முடியும்.
பொதுவாக வேறு நாட்டு (Except Canada) MSc கள் அமெரிக்காவில் கருத்தில் எடுக்கப் படுவது அரிது (விதி விலக்குகள் உண்டு), PhD இக்கு அமெரிக்காவுக்கு வரும்போது நீங்கள் திரும்பவும் அமெரிக்காவில் MS course work படித்துத் தான் ஆக வேண்டும்.
நீங்கள் MS மட்டும் தான் படிக்கப் போகிறீர்களா அல்லது PhD வரைக்கும் படிக்கப் போகிறீர்களா என்பது உங்களது தேவை, விருப்பங்களைப் பொறுத்தது. என்ன செய்ய வேண்டும் என்பது உங்களது தெரிவு உங்கள் விருப்பம் தேவை என்பவற்றில் தங்கி உள்ளது. நீங்கள் அமெரிக்கா சென்றபின்னர் உங்களுக்கு அங்குள்ள வாய்ப்புகள், கல்வி முறை போன்றவற்றில் மேலும் பல விடயங்கள் தெரியவரும் அப்போது, நீங்கள் இப்போது திட்டமிட்டு இருப்பதைக் காட்டிலும் வேறு பட்ட முடிவுகளை எடுக்ககலாம். அமெரிக்காவுக்கு MS மட்டும் என்று சென்று பின்னர் விருப்பப்பட்டு PhD வரை தொடர்ந்தவர்களும் இருக்கிறார்கள், PhD செய்யச் சென்று பின்னர் விருப்பப்பட்டு MS உடன் முடித்தவர்களும் இருக்கிறார்கள். அதாவது சிலவேளைகளில் உங்கள் முடிவை நீங்களே பின்னர் மாற்றவும் கூடும்.
Assistantship (scholarship) எடுப்பது PhDக்கு இலகுவானது MSக்கு கடினமானது .உங்களுக்கு PhD admission தரும் அதே University நீங்கள் MS இற்கு மட்டுமே apply பண்ணி இருந்தால் Assistantship தராதுவிடலாம். ஆனாலும் நீங்கள் முயற்சி செய்தால் தனியே MS உம் Assistantship உடன் எடுக்கலாம்.
அமெரிக்க Financial aid (Scholarship) வகைகள் என்ன, அவை எப்படி இயங்குகின்றன?
உங்களுக்கு விளங்குவதற்காக நான் Scholarship என்ற பதத்தை பல இடங்களில் பாவித்து உள்ளேன் ஆனால் அதன் சரியான பதம் - "Financial Aid". Assistantship என்பது தான் மிகப் பொதுவான மாணவர்களுக்கு கிடைக்கும் Financial aid. இது மிக அதிக அளவில் வழங்கப் படுகிறது . உங்களுக்கு Assistantship கிடைத்தால் உங்களது course fee பொதுவாக free. அதைவிட மாதம் உங்களுக்கு $1500-$2000 பணம் தரப்படும். வாழ்க்கைச் செலவுகள் போக உங்களிடம் $500-$1000 கையில் மிஞ்சும். இந்த Assistantship இலே பிரதானமான இரண்டு வகைகள் உண்டு.
Research Assistantship (RA)
You will have to perform a research under the supervision of a professor, this research may be sponsored by a company or by the university itself or sometimes by the government. It's the party that funds the research takes care of your course fee and pays you a monthly salary too for doing the research.
Teaching Assistantship (TA)
It's similar to a Instructor/Demonstrator job in a Sri Lankan university. But here you have to spend more time on preparation. Universities take a certain number of Teaching Assistants.
There are some few other types of assistantships but they are not that much around as RA and TA.
Fellowships - Free course fee + You will be given money just for free. This is only given to some outstanding students and the chances of getting this is very low though you have extremely high profile.
On campus jobs - You are allowed to work in your university 20 hours per week and you can get jobs in places like library, cafeteria, labs, etc. You will be paid around $10/hour. If you manage to find an on campus job you will earn $800/month but it's lesser than an assistant ship and also here your course fee is not made free - You have to pay. However, something is better than nothing.
If you are given an assistantship that itself counted as a 20 hour job and you can't do any on-campus jobs (well, don't be greedy and you can't either)
சரியான முறையில் முயற்சி செய்தால் Assistantship உடன் ஒரு MS/PhD பெறுவது நீங்கள் நினைப்பதை விட இலகுவானது, அது உங்களால் முடியும். பொதுவாக இந்தியா சீனா நாடுகளின் பெரும்பாலான தலை சிறந்த பொறியல், விஞ்ஞான மாணவர்கள் அமெரிக்கா செல்கிறார்கள். ஆனால் இலங்கையில் இது மிகக் குறைவு, இதற்கான காரணங்கள்.
- அமெரிக்க உயர்கல்வி admission/scholarship கடினமானது என்ற அபிப்பிராயம் (அமெரிக்க கல்வி system பற்றி இலங்கையில் போதிய வழிகாட்டல், தகவல் இல்லாமை)
- GRE ஒரு மேலதிக தேவையாக இருப்பது.
- ஆங்கில அறிவு தேவை (அமெரிக்க admission இற்கு IELTS/TOEFL இல் ஒரு descent ஆன ஸ்கோர் தேவையாக இருப்பது)
சராசரியான ஆங்கில அறிவு ஆவது இருக்க வேண்டும். நல்ல ஆங்கில அறிவு உங்களது admission வாய்ப்பை எப்போதுமே அதிகரிக்கும்.
பொதுவாக American universities உங்களிடம் TOEFL (iBT) 80 இக்கு மேல் எதிர்பார்க்கும் . IELTS என்றால் 6.5. - Generally TOEFL cut-out 80 and IELTS cut-out 6.5. Cut-off changes depending on the University. எப்போதும் எவ்வளவு அதிகமாக score எடுக்கிறீர்களோ அது அவ்வளவுக்கு நல்லது . சரி நீங்கள் TOEFL/IELTS இல் தேவையான அளவு எடுத்து விட்டீர்கள், அடுத்தது..Next step..
உங்கள் Admission, Scholarship ஐ இரண்டு விடையங்கள் தீர்மானிக்கின்றன - GRE and GPA. இரண்டுமே மிக முக்கியம் சில universities GRE scoreஐ GPA ஐ விட முக்கியமாகப் பார்க்கும் சில universities GPA ஐ GRE scoreஐ விட முக்கியமாகப் பார்க்கும். ஆக உங்களுக்குத் தெரிய வேண்டியது - Good GPA, Good GRE (and good TOEFL too) both are almost equally important. நீங்கள் TOEFL இல் மிகச் சிறந்த score (such as 100, 110) வைத்திருப்பின் அதுவும் ஒரு additional advantage but don't worry if you don't have that much.
அமெரிக்க கல்வி முறையில் "1st class", "2nd class" போன்ற வகைப் படுத்தல் இல்லை, அவர்கள் உங்கள் GPA ஐ பார்ப்பார்கள். ஆக, ஒரு நல்ல GPA (3.5+) இருந்தால் அது போதும். GPA குறைவாக இருந்தால் நீங்கள் GRE இல் சிறப்பாக score பண்ணி அதை நிவர்த்தி செய்ய முடியும் ஆனால் GRE நல்ல score எடுக்க மிகச் சிறந்த English knowledge or high preparation அவசியம். GRE கணிதப் பகுதி ஒரு இலங்கை பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான மாணவனுக்கு சிரமமாக இருக்காது. நீங்கள் 720-800 எடுப்பீர்கள், எடுக்கவேண்டும். மீதி உங்களது ஆங்கில (Verbal) புள்ளி. உங்கள் GPA குறைய என்றாலும் கவலைப் படவேண்டாம், பின்வாங்க வேண்டாம். நீங்கள் GRE, TOEFL போன்றவற்றில் ஓரளவு நன்றாக செய்து சளைக்காது முயற்சி செய்தால் 3.0 இற்கு சிறிது குறைவான GPA உடன் கூட நீங்கள் admission (even with assistantship) எடுக்க முடியும். அப்படி எடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல பெறுபேறு வைத்திருக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்ல University செல்ல முடியும்.
ஆங்கில அறிவை எப்போதும் வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே ஆங்கில அறிவை இயலுமான வரை விருத்தி செய்யுங்கள். TOEFL, GRE இல் அதிகமாக எடுக்க நல்ல ஆங்கில அறிவு தேவை.
GRE இல் சிறந்த புள்ளி பெறுவதற்கு இரெண்டாம், மூன்றாம் வருடங்கள் படிக்கும் போதே GRE ஆங்கில பகுதிக்காக சிறிது சிறிதாக கற்க தொடங்குங்கள். Latest Barron's GRE guide book ஒன்றை வாங்கி நீங்களாகவே படியுங்கள். ஏதாவது institute செண்டு படிப்பதை விட நீங்களாக கற்பது எப்பவும் சிறந்தது.
உங்கள் கல்விப் பெறுபேறுகளுக்கு ஏற்ப ஒரு University ஐத் தெரிவு செய்ய வேண்டும், அமெரிக்க பல்கலைக்கழக தரப்படுத்தலுக்கு US News & World Report ஐ நீங்கள் பார்க்க வேண்டும். உங்கள் Profile இற்கு ஏற்ற ஒரு ஐந்து அல்லது அதற்கு அதிகமான பல்கலைக்கழகங்களுக்கு apply பண்ணுங்கள். அதேபோன்று அங்கு உள்ள அல்லது வெவேறு பல்கலைக்கழக Professors இக்கு உங்கள் Resume ஐ ஈமெயில் பண்ணுங்கள், உங்களுக்கு அவருடன் அவரது துறையில் research செய்ய ஆர்வம் இருப்பதாக சொல்லுங்கள், அவரிடம் அந்த நேரம் ஒரு Research Assistant தேவை ஆக இருந்தால், அவர் நீங்கள் அந்த இடத்துக்கு தகுதியானவர் என நினைக்கும் பட்ச்சத்தில் உங்களுக்கு Research Assistantship + admission கிடைக்கும், இது assistantship எடுப்பதற்கான ஒரு மேலதிக வழி. இல்லாவிட்டாலும் பல்கலைகழகம் உங்களது admission process இன்போது உங்களுக்கு தகமை உள்ளது என்று கருதினால் Assiatantship கொடுக்கும். நீங்கள் PhD apply பண்ணினால் உங்களுக்கு admission கிடைக்கும் போது Assistantship உம் கிடைபதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உங்களுக்கு assistantship கிடைக்காவிடினும் நீங்கள் எப்படியாவது அமெரிக்கா சென்றபின்னர் அங்கு சென்று நீங்கள் உங்கள் திறமைஐ நிரூபிக்கும் சந்தர்ப்பத்தில் assistantship or any other financial aid பெறக்கூடியதாக இருக்கும். ஆகவே உங்களுக்கு அமெரிக்க கல்வியில் மிகவும் ஆர்வம் இருந்தால் assistanship முதலில் கிடைக்காவிடாலும் நீங்கள் கையில் பணத்துடன் செல்லுங்கள் அங்குள்ள system புரிந்தவுடன் உங்களால் Assistantship அல்லது at-least ஏதாவது 20 hour on-campus job ($700-800/month) எடுக்கக் கூடியதாக இருக்கும். இந்த முறையில் நிறைய இந்திய மாணவர்கள் அமெரிக்காவுக்கு வருகிறார்கள். வெற்றிகரமாக கல்வியை பூர்த்தி செய்து நல்ல வேலையில் அமர்கிறார்கள்.
Assistantship இல்லாமல் நீங்கள் பணம் கொடுத்து USA படிக்க செல்லும் போது உங்கள் ஒரு வருட செலவுக்கு சமாமான தொகைஐ வங்கியில் ஆறு மாதத்திற்கு மேலாக வைத்திருந்து விசா INTERVIEWவின் போது காண்பிக்க வேண்டும். இந்த வங்கி கணக்கு உங்களுடையதாக அல்லது உங்களுடைய பெற்றோர் அல்லது உங்கள் உடன் பிறந்த சகோதரரினதாக இருக்கலாம். வேறு எவருடைய financial supportகள் (மாமா , மச்சான், ஏதாவது உறவினர், etc) அமெரிக்க வீசாக்கு ஏற்றுக் கொள்ளப் பட மாடாது.

மேலதிக தகவல்களை இன்னொரு நாள் நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.
US has many universities with different admission nature, financial aid nature, post degree job nature, etc and some of them may not fit into the characteristics I outlined in this article. I gave you the general picture of the system as it's the best way to explain something. Remember everything has exceptions too.

(This post took a whole day, so I'm not sure when I'll write my next post. Writing in English is pretty easy due to the typing easiness but most of you would not bother reading it if I wrote it in English. However I wrote some parts in English in order to save some of my time).